வீடியோ ஸ்டோரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர்

kaleelrahman

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருவதால் நாகர்கோவில் சந்தைவிளை பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

சந்தைவிளை பகுதியில் இருந்து வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெள்ள பாதிப்பு இருக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டு ஒருபகுதி மற்ற பகுதியோடு தொடர்பு இல்லாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.