காரில் அதிமுக கொடியுடன் சசிகலா செல்வதை ஏற்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ''மதுசூதனனை சசிகலா சந்தித்ததில் தவறில்லை. ஆனால் காரில் அதிமுக கொடியுடன் சசிகலா எப்படி செல்வார்?. ஜானகியை போல் கட்சி நலனுக்காக சசிகலா விட்டுத்தர வேண்டும்” எனத் தெரிவித்தார்