வீடியோ ஸ்டோரி

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பல்லக்கில் ஊர்வலமாகச் செல்லும் சாமி சிலைகள்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பல்லக்கில் ஊர்வலமாகச் செல்லும் சாமி சிலைகள்

கலிலுல்லா

நவராத்திரி விழாவுக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல்லக்கில் வைத்து மூன்று சிலைகள் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் இருந்து உதித்த நங்கை, குமாரக்கோவிலில் இருந்து வேளிமலை குமாரசாமி, தேவாரக்கெட்டில் இருந்து சரஸ்வதி என மூன்று சிலைகள் ஊர்வலமாக கேரள மாநிலம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். மூன்று சாமிகளின் ஊர்வலத்தையும் இரு மாநில மக்கள் வழிநெடுகிலும் காத்திருந்து சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள்.

தற்போது நோய்த்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், ஆரவாரம் இல்லாமல் மூன்று சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது குழித்துறை சென்றுள்ள சாமி சிலைகள், நாளை தமிழக, கேரள எல்லையான களியக்காவிளை சென்றடைகிறது. அங்கு கேரள அரசு அதிகாரிகள் சிலைகளுக்கு வரவேற்பு அளித்து, திருவனந்தபுரம் கொண்டு செல்கின்றனர்.