வீடியோ ஸ்டோரி

ரஜினி தொடங்கி சிவகார்த்திகேயன் வரை.. ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள் - வீடியோ

ரஜினி தொடங்கி சிவகார்த்திகேயன் வரை.. ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள் - வீடியோ

webteam

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிற நிலையில், பிரபலங்கள் வாக்குசாவடி மையத்திற்கு வந்து வாக்களித்த வீடியோ தொகுப்பை இங்கு காணலாம். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் முதல் ஆளாக வாக்குசாவடி மையத்துக்கு தனது மனைவியுடன் வந்த அஜித் வாக்களித்தார். அதே போல நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் வாக்குசாவடி மையத்துக்கு வந்து வாக்களித்தனர். அதே போல நடிகர்கள் விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அது தொடர்பான முழுவீடியோ தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம்.