வீடியோ ஸ்டோரி

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

கலிலுல்லா

பாமகவை தவிர, பிற கட்சிகளுடனான கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அதிமுகவுடன் கூட்டணியில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தலை தனித்தே சந்திக்கப்போவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''பா.ம.கவைத்தவிர பிற கட்சிகளுடனான கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் தொடர்கிறது'' என்று தெரிவித்தார்.