வீடியோ ஸ்டோரி

பவானிகூடுதுறையில் இரு கரைகளை தொட்டபடி செல்லும் வெள்ளம்

பவானிகூடுதுறையில் இரு கரைகளை தொட்டபடி செல்லும் வெள்ளம்

webteam

நீலகிரி மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக பவானி ஆறும் தெங்குமரஹாடா மாயாறும் வந்து சேரும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பவானிகூடுதுறையில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்துசெல்கிறது.