வீடியோ ஸ்டோரி

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரத்தில் கொடியேற்றம்

Sinekadhara

பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றது. வரும் 20 ஆம் தேதி நடைபெறும் இவ்விழாவையொட்டி, இன்று காலை கோயிலுக்குள் இருக்கும் கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

அப்போது கூடியிருந்த சிவனடியார்கள் கயிலாய வாத்தியம் இசைத்தும், பக்தி முழக்கம் எழுப்பியும் சிதம்பரம் நடராஜரை வழிபட்டனர். வரும் 19 ஆம் தேதி தேரோட்டமும், அதைத் தொடர்ந்து முக்கிய விழாவான ஆருத்ரா தரிசனமும் வரும் 20 ஆம் தேதி காலையில் நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆருத்ரா தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.