வீடியோ ஸ்டோரி

இந்தியாவுக்கு ஒரே ஒரு பதக்கம் - டோக்கியோ ஒலிம்பிக் முதல் வாரத்தின் முக்கிய நிகழ்வுகள்

EllusamyKarthik

வேகம், விறுவிறுப்பு, பதக்கம் சேகரிப்பு என டோக்கியோ ஒலிம்பிக் களத்தில் அனல் பறந்தாலும் இந்திய அணியின் பதக்க எண்ணிக்கையில் நான்காவது நாளாக எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும் அடுத்து வரும் நாட்களில் இந்தியா பதக்கங்களை வெல்லும் என்ற நம்பிக்கையை தளரவிடாது ரசிகர்கள் இருக்கின்றனர்.

முதல் வாரம் எப்படி?

ஆடவருக்கு நிகராக மகளிரும் பதக்க வேட்டை ஆடி வருகின்றனர். இந்தியாவை பொறுத்த வரை மீராபாய் சானு வெள்ளி வென்று அசத்தினார். இவரை தவிர பி.வி.சிந்து, மேரி கோம், லவ்லினா மாதிரியான வீரங்கனைகள் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

சர்வதேச அளவில் பில்லிபைன்ஸ் நாட்டுக்காக முதல் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார் Hidilyn Diaz. அதே போல டிரையலத்தான் ஃப்ளோரா டஃப்பி, பெருமூடாவுக்காக முதல் தங்கம் வென்றார். 

பதக்க பட்டியல்!

12 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களுடன் சீன அணி முதலிடத்தில் உள்ளது. 12 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 21 பதக்கங்களுடன் ஜப்பான் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. 10 தங்கப்பதக்கங்களுடன் அமெரிக்க அணி மூன்றாவது இடத்திலும், 7 தங்கப்பதக்கங்களுடன் ரஷ்ய அணி நான்காவது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலிய அணி 6 தங்கப்பதக்கங்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.