பொறியியல் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 378 கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகம், மதுரை தியாகராஜர் கல்லூரி உள்ளிட்ட 15 கல்லூரிகளில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. நெல்லை மற்றும் பர்கூரில் உள்ள அரசு கல்லூரிகள் உள்ளிட்ட 11 கல்லூரிகளில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகளில் 378 கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்கள் நிரம்பியுள்ளன. 71 கல்லூரிகளில் ஒரு இடம் கூட மாணவர்களால் தேர்வு செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு 2ம் சுற்றில் 20,438 மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். இதில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகம், எஸ் எஸ் என் கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி, பிஎஸ்ஜி, அழகப்பா கல்லூரி, சிஐடி, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி சிஇஆர்ஐ உள்ளிட்ட 15 கல்லூரிகளில் 90 சதத்திற்கும் மேல் இடங்கள் நிரம்பியுள்ளன.