வீடியோ ஸ்டோரி

தாஜ்மஹாலுக்கு நுழைவுக்கு ஆன்லைனில் போலி டிக்கெட் விற்ற பொறியியல் பட்டதாரி கைது

Veeramani

கொரோனாவால் வேலையிழந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், போலி இணையதளத்தை உருவாக்கி, அதில் உலக அதிசயமான தாஜ்மஹாலுக்கு நுழைவு டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளார்.

கொரோனா பொதுமுடக்கத்தின் போது வேலையிழந்த பல ஆயிரம் இளைஞர்களில், ஒருவர்தான் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் சந்த். பொறியியல் பட்டதாரியான அவர், மாதவருமானத்திற்காக போலி இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில், தாஜ்மஹால் உள்ளிட்ட பிரபல சுற்றுலாத்தளங்களுக்கான நுழைவு டிக்கெட்டுகளையும் அவர் விற்றுள்ளார்.

www.agramonuments.in என்ற அந்த இணையதளத்தில் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்து ஏமாற்றமடைந்தனர். இது தொடர்பாக தொடர்ந்து தொல்லியல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டதால், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தீப் சந்தை கைது செய்தனர்.