சரியான திட்டமிடல் இல்லாததே பாதிப்புக்கு காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பூந்தமல்லியில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, சென்னையில் 8 நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளது; சரியான திட்டமிடல் இல்லாததே பாதிப்புக்கு காரணம் என்றும், மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் மக்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.