Draupadi Murmu  pt desk
வீடியோ ஸ்டோரி

பேசிக் கொண்டிருந்த போது திடீரென தடைபட்ட மின்சாரம் - ஆனாலும் தொடர்ந்து பேசிய குடியரசுத் தலைவர் முர்மு

ஓடிசாவில் நடைபெற்ற பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசிக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தடைபட்டது. ஆனால், அதை பொருட்படுத்தாத திரௌபதி முர்மு தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டே இருந்தார்.

Kaleel Rahman

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

ஓடிசாவில் நடைபெற்ற பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசிக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தடைபட்டது. ஆனால், அதை பொருட்படுத்தாத திரௌபதி முர்மு தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டே இருந்தார்.

ஓடிசா மாநிலம் பாரிபடாவில் உள்ள மஹாராஜா ஸ்ரீராம் சந்திரா பாஞ்சா டியோ பல்கலைக் கழகத்தில் நேற்று (06.05.2023) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தடைபட்டது.

president of India

இந்நிலையில் மின்சாரம் தடைபட்டதைக் கண்டு கொள்ளாத திரௌபதி முர்மு மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். திரௌபதி முர்மு பேசியதை மாணவர்களும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.