சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
"தேர்தல் சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்த வாக்களிப்பதை பார்க்க முடிகிறது. தேர்தல் ஆணையம் சிறப்பாக பணி செய்து வருகிறது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் 'கருப்பு மற்றும் சிவப்பு' நிறத்தில் மாஸ்க் அணிந்து வந்து வாக்கு செலுத்தியது குறித்தும், நடிகர் விஜய் மிதிவண்டியில் வந்து வாக்கு செலுத்தியது குறித்தும் அவரிடம் எழுப்பட்ட கேள்விக்கு "இதை நீங்கள் அவர்களிடத்தில் தான் கேட்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் கூட சைக்கிளில் வந்திருக்கலாம். நான் தேர்தல் பணிகளை கவனித்து வருவதால் அதனை பார்க்கவில்லை. அது குறித்து எதுவும் தெரியாது" என அவர் சொல்லியுள்ளார்.
அவரது பதிலை வீடியோவில் காணுங்கள்.