வீடியோ ஸ்டோரி

கேந்திரிய வித்யாலாயாவில் தமிழ் பாடம் - தர்மேந்திர பிரதானிடம் திருச்சி சிவா வலியுறுத்தல்

கேந்திரிய வித்யாலாயாவில் தமிழ் பாடம் - தர்மேந்திர பிரதானிடம் திருச்சி சிவா வலியுறுத்தல்

JustinDurai

புதிதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியை ஏற்றுள்ள தர்மேந்திர பிரதானை கோரிக்கை மனுவுடன் உடனடியாக சந்தித்தார் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா. தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் மாநில மொழிகளுக்கு எதிரி அல்ல என்று  தர்மேந்திர பிரதான் கூறியதாக திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.