தேர்தலில் போட்டியிட எனக்கு எந்த தடையுமில்லை என எழும்பூர் திமுக செயலாளர் வேலு தெரிவித்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த எழும்பூர் பகுதிச் செயலாளர் வேலு மீது கொலைவழக்கு நிலுவையில் இருக்கும்போது அவருக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்த நிலையில், தம்மீது கொலை வழக்கு நிலுவையில் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
தம்மீது 2017ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் ஒரு கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், விசாரணையில் அந்த வழக்கு தற்கொலை வழக்கு என்றும் காவல்துறையின்ர் முடிவு செய்ததாகவும் வேலு கூறியுள்ளார். தான் நிரபராதி என வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் தமக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எழும்பூர் பகுதி திமுக செயலாளர் வேலு விளக்கமளித்துள்ளார்.