வீடியோ ஸ்டோரி

ஹெலிகாப்டர் விபத்து: தீயை அணைக்க உதவிய மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு நன்றி

ஹெலிகாப்டர் விபத்து: தீயை அணைக்க உதவிய மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு நன்றி

Sinekadhara

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தின்போது, தீயை அணைப்பதற்காக உதவிய மக்களுக்கு, கம்பளி உள்ளிட்ட பொருட்கள் வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு நன்றி தெரிவித்தார்.

நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக உதவி செய்துள்ளனர். தங்களது வீடுகளில் இருந்த பொருட்களைக் கொண்டு தீயை அணைத்துள்ளனர். அவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு கம்பளி உள்ளிட்ட பொருட்களை வழங்கி நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்து நடந்தவுடனேயே குன்னூர் காவல்துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று பொதுமக்களின் உதவியுடன், மூன்று பேரை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்ததாகத் தெரிவித்தார்.