பெரு மழையின் காரணமாக சென்னை நகர்ப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள், பக்கிங்காம் கால்வாய் வழியாக கோவளம் கடற்கரையில் கலக்கிறது.
இதனால் கோவளம் கடற்கரை முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. பிளாஸ்டிக் குப்பைகளால் கடல் பரப்பு மாசடையும் நிலையில், கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கும் சூழல் ஏற்படும் அபாயம் உருவாகியிருக்கிறது.