வீடியோ ஸ்டோரி

ராமநாதபுரம்: கடலில் 3 கி.மீ. தொலைவுக்கு இறந்து மிதக்கும் மீன்கள் - மீனவர்கள் அச்சம்

கலிலுல்லா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடலில் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு கொத்துக் கொத்தாக மீன்கள் இறந்தநிலையில் மிதப்பதால் ஆய்வு நடத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கீழக்கரையில் உள்ள ஜெட்டி பாலம், மீனவர் குப்பம், பாரதிநகர் உள்ளிட்ட கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் மாற்றமடைந்து பச்சை நிறத்தில் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கடலில் கடல் குதிரை உள்ளிட்ட அரிய வகை மீன்கள் கொத்து கொத்தாக 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு இறந்த நிலையில் கடலில் மிதப்பதோடு , கடற்கரை ஓரத்திலும் கரை ஒதுங்கியுள்ளன.

இதுகுறித்து மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி அச்சத்தை போக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.