வீடியோ ஸ்டோரி

கடலூர்: வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து நிவாரணம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

kaleelrahman

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் முக.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் வழக்கமான மழையை விட அதிக மழை பெய்ததால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர் தண்ணீரில் தத்தளிக்கிறது. அதேபோல் 1095 குடிசைகள் முழுமையாகவும் பாதியாகவும் சேதமடைந்தள்ளன. இந்த சேதங்களை பார்வையிட இன்று கடலூர் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள மாருதி நகரில் வசிக்கும் மக்களை சந்தித்து நிவாரணம் மற்றும் வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.