வீடியோ ஸ்டோரி

”முதலில் தமிழர்கள், பிறகுதான் இந்தியர்கள்” - திருமாவளவன், கிருஷ்ணசாகர் இடையே வாக்குவாதம்

”முதலில் தமிழர்கள், பிறகுதான் இந்தியர்கள்” - திருமாவளவன், கிருஷ்ணசாகர் இடையே வாக்குவாதம்

Sinekadhara

சென்னையில் இந்தியா டுடே நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற அரசியல் சார்ந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கும், பாஜக செய்தி தொடர்பாளர் கிருஷ்ணசாகர் ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், இந்தியா டுடே குழுமத்தின் தென்னிந்தியா 2021 என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், தாங்கள் சாதியை அடிப்படையாகக் கொண்டவர்கள் அல்ல எனவும், சாதிக்கு எதிரானவர்கள் எனவும் கூறினார். மேலும் தாங்கள் தமிழர்கள், பிறகுதான் இந்தியர்கள் எனக் கூற, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிருஷ்ணசாகர் ராவ், எல்லோரும் இந்தியர்கள் எனக் கூறியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.