கோவையில் குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே புதர்மண்டி குப்பைக் கூடமாக இருந்த புறம்போக்கு நிலத்தை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் ஆக்ஸிஜன் பூங்காவாக மாற்றியுள்ளனர்.
கோவை சௌரிபாளையம் சுப்பிரமணியா நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு இடையில் புதர்மண்டி கிடந்த குப்பைமேடு தற்போது அழகிய பூங்காவாக மாறியுள்ளது.
மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தை தன்னார்வ தொண்டு நிறுவன உதவியுடன் பொதுமக்களால் சுத்தம் செய்யப்பட்டு அழகிய பூச்செடிகள், மூலிகைச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.
பெரியவர்கள் கூட செல்ல முடியாத இடத்தை குழந்தைகள் துள்ளி விளையாடும் இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாக உருவாக்கியுள்ளனர் அப்பகுதி மக்கள்