வீடியோ ஸ்டோரி

திருப்பதி: கோயில் பாதையில் படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு

திருப்பதி: கோயில் பாதையில் படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு

Sinekadhara

திருப்பதி வேணுகோபால சுவாமி கோயில் அருகே உள்ள கடைத்தெருவில், நாகப் பாம்பு ஒன்று திடீரென படமெடுத்து ஆடியதைக் கண்டு பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர், அங்கிருந்து பாபநாசம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் வேணுகோபால சுவாமி கோயிலுக்கும் சென்று வருவது வழக்கம். அங்குள்ள கடைத்தெருவில், 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு படமெடுத்து ஆடியபடி பக்தர்கள் நடந்து செல்லும் பாதைக்கு வந்தது.

இதுகுறித்து தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஊழியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவர், நாகப்பாம்பை பத்திரமாகப் பிடித்து, சேஷாசலம் வனப்பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டார்.