சீனாவில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் திறந்தவெளி நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். கடந்த சனிக்கிழமை அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் வாட்டி வதைத்தது. இதனால் அப்பகுதி மக்கள் நீர் நிலைகளை தேடி தஞ்சமடைந்தனர். அந்த வகையில் அங்கு உள்ள திறந்தவெளி நீச்சல் குளத்தில் சிறுவர்கள் உட்பட ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கடல் அலையில் துள்ளி விளையாடிதோடு வெப்பத்தை தணிக்கவும் நீராடினர்.