ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி வரவேற்றார்.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதால், ஆசிரியர்கள் உற்சாகத்துடன் மாணவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். இதனிடையே, சென்னை மடுவங்கரை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் இனிப்பு வழங்கி வரவேற்றார். பின்னர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளியிலிருந்து புறப்படும்போது, வாசலில் நின்று கொண்டிருந்த பெற்றோர்களிடம் முதலமைச்சர் நலம் விசாரித்தார்.