ஈரோட்டைச் சேர்ந்த தனியார் கோழிப் பண்ணை நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித் துறை சோதனையில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த தனியார் கோழிப் பண்ணை நிறுவனம் கால்நடை தீவனம், முட்டை ஏற்றுமதி, சமையல் எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. கேரளா மற்றும் கர்நாடகா என 40 இடங்களில் இந்நிறுவனம் இயங்கி வரும் நிலையில், முறையாக வருமான வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து 40 இடங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வருவாய்க்கு அதிகமாக கணக்கில் வராத பணம் 300 கோடி ரூபாயும், ரொக்கமாக 3 கோடியே 30 லட்சம் ரூபாயும் கண்டறியப்பட்டது. மேலும், வருவாய்க்கான முறையான ஆவணங்களை பராமரிக்காததும் சோதனையில் தெரியவந்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.