உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் கார் ஓட்டுநரை இளம்பெண் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் , அப்பெண்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளம்பெண் ஒருவர் சிக்னலில் சாலையை கடந்து செல்லும்போது அவர் அருகே வரும் கார் ஒன்று சிக்னலில் நிற்கிறது. இந்நிலையில் கார் ஓட்டுநரை அப்பெண் தாக்குகிறார். கார் தம்மீது மோதியதால் அப்பெண் தாக்கியதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் வெளியான சிசிடிவி காட்சியில் அப்பெண் மீது கார் மோதவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
அந்த பெண் ஓட்டுனரை தாக்கும் வீடியோ வைரலாக பரவிய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமுக வலைதளங்களில் குரல்கள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில் கார் ஓட்டுநரை தாக்கிய பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே #justiceforcabdriver என்ற ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. அதே நேரம் போக்குவரத்து விதிகளை மீறி சிக்னலில் நிற்காமல் வந்த ஓட்டுனருக்கும் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.