வீடியோ ஸ்டோரி

உத்தராகண்ட்டில் மழை - பாலம் சேதமடைந்து, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்

கலிலுல்லா

உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு பாதிப்புகளை அம்மாநிலம் சந்தித்து வருகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழையால் கவுலா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஹல்த்வானி பாலம் சேதமடைந்தது. நைனிடால் மற்றும் உத்தம் சிங் நகரை இணைக்கும் வகையில் கவுலா நதியில் ஹல்த்வானி பாலம் உள்ளது. தொடர்மழையால் கவுலா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. முன்னெச்சரிக்கையாக பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

உத்தராகண்டில் பெய்த மழை வெள்ளத்தில் காரில் சிக்கியவர்களை, மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். பத்ரிநாத்தில் பெய்த கனமழையால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், LAMBAGAD பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த மீட்புப் படையினர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் மற்றும் காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.