வேலூர் மாநகருக்கு உட்பட்ட பகுதியில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை சாலையோரம் வீசிச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
காகிதப்பட்டறை பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையில் பச்சிளம் குழந்தை கிடப்பதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக குழந்தையை மீட்ட பொதுமக்கள், காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை நலமாக உள்ள நிலையில், அதனை குப்பையில் வீசிச் சென்றது யார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.