வீடியோ ஸ்டோரி

மகாகவி நினைவலைகள்: நெற்றி சுருங்கேல், நேர்படப்பேசு என புதிய ஆத்திசூடி தந்த பாரதியார்

மகாகவி நினைவலைகள்: நெற்றி சுருங்கேல், நேர்படப்பேசு என புதிய ஆத்திசூடி தந்த பாரதியார்

JustinDurai
நெற்றி சுருங்கேல், நேர்படப் பேசு என புதிய ஆத்திசூடி தந்த பாரதி, பாவலன் மட்டுமல்ல பத்திரிகையாளரும் கூட. ஆங்கிலேயர் அஞ்சிய அந்த பத்திரிகையாளர் பாரதியைப் பற்றி எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறுகையில், ''பாரதியாரை ஆகச்சிறந்த கவிஞர் என்று அனைவரும் அறிவார்கள். தமிழில் அறியப்பட்ட இரண்டு மகாகவிகளில் ஒருவர் கம்பர், இன்னொருவர் பாரதியார். மகாகவி என்று அறியப்பட்ட பாரதியார் வெறும் கவிஞர் மட்டுமல்ல ஆகச்சிறந்த பத்திரிகையாளரும்கூட என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார் அவர்.