வீடியோ ஸ்டோரி

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க எதிர்ப்பு - வங்கி ஊழியர்கள் 2நாள் வேலைநிறுத்தம்

கலிலுல்லா

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மத்திய அரசுடன், பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்தை தோல்வியடைந்ததால், வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி 2 நாட்கள் போராட்டம் நடத்துகின்றனர். பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியார் நிறுவனத்திற்கு வழங்கும்போது சாமானிய மக்களின் முதலீட்டிற்கு ஆபத்து நேரலாம் என வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனக்கூறி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனால் எஸ்.பி.ஐ. போன்ற பொதுத்துறை வங்கிகளில் பணபரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதனிடையே வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், வங்கிச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றிட மத்திய பாஜக அரசு, தீவிரம் காட்டுவது ஜனநாயக விரோதம் என குறிப்பிட்டுள்ளார்.