வீடியோ ஸ்டோரி

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் பூகம்பம்- சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடிய நீர்

Veeramani

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் 6 புள்ளி 6 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதில் 13 பேர் காயமடைந்தனர்.

ஜப்பானின் நான்கு முக்கிய தீவுகளில் ஒன்றான கைஷூவை மையமாக கொண்டு அதிகாலையில் பூகம்பம் ஏற்பட்டது. இதனால், அருகில் உள்ள ஒயிடா மற்றும் மியாசாகி ஆகிய பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. பலவீனமான சுவர்கள் இடிந்து விழுந்தன. குடிநீர் குழாய்கள் உடைந்ததில் வீதியெங்கும் வெள்ளம் போல நீர் பெருக்கெடுத்து ஓடியது. இடிபாடுகளில் சிக்கி 13 பேர் படுகாயமடைந்தனர். ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவான இந்த பூகம்பம் சில நிமிடங்கள் வரை நீடித்தது. எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.