Journalist Mani
Journalist Mani pt desk
வீடியோ ஸ்டோரி

“டாஸ்மாக்கில் கணக்கில் வராமல் பல ஆயிரம் கோடிகள் சுத்திட்டு இருக்கு” - பத்திரிகையாளர் மணி பேட்டி

Kaleel Rahman

கள்ளச்சாராய மரணங்கள் சட்ட ஒழுங்கு பிரச்னை, ஊழல், மதுவிற்பனை முறைகேடுகள் தொடர்பாக ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட புகார் குறித்து உங்களது கருத்து?

இதில், அரசியலும் இருக்கிறது. மக்கள் மீதான அக்கறையும் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கூறும் புகார்களில் இவை இரண்டுமே கலந்திருக்கும். ஒரு நீண்ட புகார் பட்டியலை இருவரும் அடுத்தடுத்த நாளில் கொடுத்திருக்கிறார்கள். இவை ஒதுக்கித்தள்ள முடியாத குற்றச்சாட்டுகளாக நான் இதை பார்க்கிறேன்.

hospital

டாஸ்மாக்ல கடந்த 20 ஆண்டுகளாகவே இந்த பிரச்னை இருக்கு. பிடிஆர் நிதியமைச்சராக இருந்த போது, 20 ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் வராமல் வெளியே சுற்றுவதாகச் சொன்னார். இது பல ஆண்டுகளாக பலரும் வைக்கக் கூடிய குற்றச்சாட்டு. அரசு சொல்லும் அளவை விட டாஸ்மாக் வருமானம் இரண்டு மடங்கு அதிகமாதான் இருக்கும் என்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் சொல்லியிருந்தார்.

முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோருவது சரியா?

முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருவது அபத்தமானது. அதை நான் கண்டிக்கிறேன். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு கோரிக்கை. இப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்து இதுபோன்ற கள்ளச்சாராய மரணம் நடந்திருந்தால், ஸ்டாலின் என்ன செய்திருப்பார். எடப்பாடி பழனிசாமி பதவிவிலக வேண்டுமென்று சொல்லியிருப்பார். இதைத்தான் இன்றைக்கு அவங்க செஞ்சிருக்காங்க.

EPS

இது அரசியல் கோரிக்கை. இதற்கான உரிமை எதிர்க் கட்சிகளுக்கு உண்டு. ஆனால் ஆளுநர், நேரடியாக தலையிட்டு செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்று அண்ணாமலை கோருவது, ரொம்ப ரொம்ப அட்டூழியமான கருத்து. இதற்கு அரசியல் சாசனத்தில் எந்த அதிகாரமும் ஆளுநருக்கு கிடையாது.

மேலும் பல்வேறு முக்கியமான கேள்விகளுக்கு பத்திரிக்கையாளர் மணி அளித்த பதில்களை அறிய கீழே உள்ள வீடியோ பாருங்கள்..