bronze statue pt desk
வீடியோ ஸ்டோரி

ஆந்திரா: உயிரிழந்த நாயின் நினைவாக வெண்கல சிலை வைத்து வழிபட்ட உரிமையாளர்!

ஆந்திராவில் பாசமாக வளர்த்த நாய்க்கு அதன் உரிமையாளர் வெண்கல சிலை வைத்தது காண்போரை கண்கலங்கச் செய்தது.

webteam

கிருஷ்ணா மாவட்டம் அம்மாபுரத்தைச் சேர்ந்தவர் சங்கரன் ஞானப்பிரகாஷ ராவ். இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக வளர்த்துவந்த நாய் சமீபத்தில் உயிரிழந்துள்ளது. இந்நிலையில், அதன் நினைவாக வெண்கல சிலை வைத்து அதற்கு பூஜை செய்து ஞானபிரகாஷ ராவ் வழிபட்டார். தங்களுக்கு விசுவாசமாக இருந்து பிள்ளைபோல் மகிழ்வித்த நாயின் நினைவாக வெண்கல சிலை வைத்ததாக அவர் நெகிழ்வுடன் கூறினார்.