வீடியோ ஸ்டோரி

'வேலைக்கு வர வேண்டாம்' என மெசேஜ் - போராட்டத்தில் குதித்த அம்மா மினிகிளினிக் பணியாளர்கள்

கலிலுல்லா

அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிடக் கோரி கடலூரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் மினி கிளினிக்குகள் மூடப்படும் என்று மாநில அரசு அறிவித்திருப்பதால் ஆயிரக்கணக்கான தற்காலிகப் பணியாளர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பால் கடலூர் மாவட்டத்தில் 66 மினி கிளினிக்குகளில் பணியாற்றிய 58 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் வரும் ஒன்றாம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகம் முன் திரண்டனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களை பாதுகாத்த தங்களுக்கு வேலை இல்லை எனக்கூறுவது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அவர்கள் கூறினர்.