வீடியோ ஸ்டோரி

"எம்.பி.க்கள் சஸ்பெண்ட்டை திரும்ப பெறுக" - நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

"எம்.பி.க்கள் சஸ்பெண்ட்டை திரும்ப பெறுக" - நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

கலிலுல்லா

காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது அவை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி காங்கிரஸ், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்த 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சிவசேனா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சிகளின் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியும் இதில் பங்கேற்றார்.