வீடியோ ஸ்டோரி

“ஜெயித்த பிறகு கட்சி மாறினால் வீடுதேடி கொலை செய்வேன்”- அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

“ஜெயித்த பிறகு கட்சி மாறினால் வீடுதேடி கொலை செய்வேன்”- அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

நிவேதா ஜெகராஜா
“கட்சி மாறினால் வீடு தேடி வந்து கொலை செய்வேன்” என பேசிய அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 28-ம் தேதி சாத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, கட்சியினர் மத்தியில் பேசும்போது, “அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு கட்சி மாறி போனால்,  வீடு தேடி வெட்டுவேன். மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டு வெட்டுவேன். என் வெட்டு முதல் வெட்டாக இருக்கும். உங்கள் பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனையில்தான் இருக்கும்” என கட்சியினரை மிரட்டும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சண்முகக்கனி மீது கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது, கலவரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள சாத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.