சென்னை கே.கே. நகரில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள கட்டடங்களின் தரம் குறித்த ஆய்வில், குறைகள் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கே.கே.நகரில் உள்ள பிருந்தாவனம் டவரில் கட்டப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, குறைகள் இருக்கும் கட்டடங்களை சரி செய்ய 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தனியார் கட்டட வல்லுனர்களை கொண்டு கட்டடத்தின் தன்மை ஆய்வு செய்ய இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.