வீடியோ ஸ்டோரி

கை வெட்டப்பட்டு தலைகீழாக தொங்கும் சடலம் - புனித நூலை அவமதித்ததாக கூறிக் கொலையா?

கை வெட்டப்பட்டு தலைகீழாக தொங்கும் சடலம் - புனித நூலை அவமதித்ததாக கூறிக் கொலையா?

JustinDurai
ஹரியானா மாநிலம் குந்திலியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுவரும் இடத்திற்கு அருகே ஒரு கை வெட்டப்பட்ட சடலம் தொங்க விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹரியானா மாநிலம் குந்திலியில் போராட்டம் நடைபெற்று வரும் இடம் அருகே ஒரு சடலம் தொங்க விடப்பட்டுள்ளது. சடலத்தின் மணிக்கட்டு பகுதி வெட்டப்பட்டுள்ளதுடன் கால் பாதம் ஒன்றும் மடங்கிய நிலையில் உள்ளது.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.எஸ்.பி.ஹன்ஸ்ராஜ், இந்நிகழ்வு குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கொல்லப்பட்டவர் பஞ்சாப்பை சேர்ந்த லக்பீர் சிங் என்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே அடையாளம் தெரியாத அந்த நபர் சீக்கியர்களின் புனித நூலை அவமதிப்பு செய்ததாகவும் அதனால் அவரின் மணிக்கட்டை சிலர் வெட்டி தொங்க விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.