வீடியோ ஸ்டோரி

சென்னை: புடவை பார்சலுக்கு அடியில் 8 கிலோ போதைப் பொருள்

சென்னை: புடவை பார்சலுக்கு அடியில் 8 கிலோ போதைப் பொருள்

கலிலுல்லா

சென்னை விமான நிலைய பார்சல் சேவை மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த 8 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பல பார்சல் சேவை மையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விவரங்களும் வெளிவந்துள்ளன.

சென்னை விமான நிலைய பார்சல் சேவை மையத்தில் கடந்த 25ஆம் தேதி நடத்திய சோதனையில், புடவை பார்சலுக்கு அடியில் 8 கிலோ போதைப் பொருள் மறைத்து கடத்தப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பார்சல் அனுப்பிய காரைக்கால் கூரியர் நிறுவனத்தில் சோதனையிட்டு, சென்னையை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்த பார்சல் குறித்து தகவல் கிடைத்தாகவும், ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இந்த தகவல் அளிக்கப்பட்டு 4 கிலோ போதைப்பொருள் அந்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதேபோல், கேரள மாநிலம் எர்ணாகுளம் கொரியர் பார்சல் அலுவலகத்தில் இருந்து பக்ரைனுக்கு கடத்தப்பட இருந்த 3.5 கிலோ போதைப் பொருளும், ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த 11.6 கிலோ போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் இருந்து மருந்துகள் அனுப்பப்படுவது போல் போதைப்பொருளை கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.