திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து மார்பில் கைவைத்து அழுத்தி முதலுதவி செய்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கேவி குப்பத்தைச் சேர்ந்த திலகவதி, தனது 7வயது மகன் சபரி மற்றும் சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி ஆகியோருடன் அரியூர் சென்றுகொண்டிருந்தார். சிறுவனுக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் வருவதை அடுத்து, சிகிச்சைக்காக மூவரும் நேற்று மாலை மருத்துவமனைக்கு சென்றனர்.
மூவரும் ஆட்டோவில் சென்ற நிலையில், இரவானதால் கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் அவர்கள் தங்கினர். நள்ளிரவில் சிறுவன் சபரிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தாய் திலகவதி உள்ளிட்ட மூன்று பெண்களும் சிறுவன் சபரியின் மார்பில் கைவைத்து அழுத்தி முதலுதவி செய்ய முயன்றனர்.
இதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான், சகோதரிகள் மூன்றுபேரையும் கைதுசெய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.