நடைபெறவிருக்கும் அசாம் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கட்சிகள் விமானத்தில் பறந்து பறந்து வாக்கு சேகரிக்கிறார்கள். மலைப்பகுதிகள் கொண்ட மாநிலம் என்பதால், சாலை போக்குவரத்தை தவிர்த்துவிட்டு பாஜகவின் முக்கியத் தலைவர்களின் பரப்புரைக்காக 24 மணிநேரமும் 5 ஹெலிகாப்டர்கள் வாடகை எடுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும், பாஜகவின் கூட்டணி கட்சிகளும் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுக்கப்பட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.