டிரெண்டிங்

ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றிய இளைஞர் : போக்சோவில் கைது

ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றிய இளைஞர் : போக்சோவில் கைது

webteam

வேலூரில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பல்லக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சாந்தகுமார் (22). கூலி வேலை செய்து வரும் இவர், பல்லக்குப்பம் கிராமத்திற்கு அருகிலுள்ள பகுதியை சேர்ந்த சிறுமியை காதலிப்பதாக தெரிவித்து ஏமாற்றியுள்ளார்.

அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சாந்தகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.