டிரெண்டிங்

தீவிரவாதிகளை ஆதரித்தவர் ராகுல்காந்தி: யோகி ஆதித்யநாத் சாடல்

தீவிரவாதிகளை ஆதரித்தவர் ராகுல்காந்தி: யோகி ஆதித்யநாத் சாடல்

rajakannan

ராகுல் காந்தி வளர்ச்சிக்கான ஆதரவாளர் அல்ல, அழிவின் ஆதரவாளர் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். 

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், குஜராத் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களை கொன்ற இஷ்ரத் ஜஹான் போன்ற தீவிரவாதிகளை ஆதரித்தவர் ராகுல்காந்தி என்று சாடினார்.

மேலும், ‘ராகுல்காந்தி தனது சொந்த தொகுதியை புறக்கணித்து வருகிறார். அமேதியில் ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட கட்டவில்லை. பின்னர் எப்படி அவரால் குஜராத்தில் வளர்ச்சியை கொண்டு வர முடியும்’ என்று கேள்வி எழுப்பினார். ராகுல்காந்தி சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை குழப்பி உள்ளதாகவும் அதனை தெளிவுபடுத்தி உண்மையை கூறவே தான் வந்ததாகவும் யோகி தெரிவித்தார். குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை பற்றி கூறுபவர்கள் நாட்டின் 70 ஆண்டுகால ஆட்சியை குறித்து பேச மறுக்கிறார்கள் என்றும் யோகி கூறினார்.