டிரெண்டிங்

உ.பி பாஜக தோல்விக்கு காரணம் என்ன? யோகியின் பதில்!

webteam

உத்தரபிரதேசத்தில் 2 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து யோகி ஆதித்யநாத் மற்றும் கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் உத்தரப்பிரதேசத்தின் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அந்த இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு, தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பூல்பூர் தொகுதியில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்று வந்த சமாஜ்வாதி கட்சியின் நாகேந்திர பிரதாப் சிங் படேல், பாஜகவின் கவுசிலேந்திர சிங் படேலை விட 59,613 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று கோரக்பூர் தொகுதியிலும் பாஜக வேட்பாளர் தத் சுக்லாவைவிட, சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் 21,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கோரக்பூர் தொகுதியில் இருந்து 5 முறை யோகி ஆதித்யாநாத் எம்.பி-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாஜகவின் தோல்வி குறித்து பேசியுள்ள யோகி, “உத்தரப்பிரதேசம் புல்பூர், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள். இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து ஆராயப்படும். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ்வாதி கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம்” என்று கூறியுள்ளார்.