டிரெண்டிங்

பாஜகவில் இருந்து விலகினார் யஷ்வந்த் சின்ஹா

பாஜகவில் இருந்து விலகினார் யஷ்வந்த் சின்ஹா

webteam

பாஜகவிலிருந்து மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா விலகுவதாக அறிவித்தார். 

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா. அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கும் இவருக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக சொல்லபட்ட நிலையில் அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவும் இல்லை. 

தொடக்கம் முதலே பாஜக மோடி அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். பிரதமர் மோடியின் கொள்கை முடிவுகளை குறைக் கூறி வந்த அவர் இன்று திடீரென மூத்த தலைவர்களுக்கு கட்சியில் மதிப்பில்லை என்று கூறி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன் என்றும் பாஜகவில் எல்லா தொடர்புகளையும் முறித்து கொள்வதாகவும் பட்னாவில் செய்தியாளர்களிடம்  தெரிவித்திருக்கிறார்.