யஷ்வந்த் சின்கா தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து சில கருத்துகளை கூறியிருந்தது, பாஜக கட்சியினர் இடையே பெரும் விவாதத்தை எழுப்பி வருகிறது.
அந்த பேட்டியில் அவர், காஷ்மீரில் நிலைமை முற்றிலுமாக சீரழிந்துவிட்டது. எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய ராணுவம் தற்போது போராட்டக்கார்களுடன் சண்டையிட்டு கொண்டிருக்கிறது. காஷ்மீரில் இருக்கும் ராணுவத்தை திரும்ப பெற வேண்டும். ராணுவ படை அனைத்தும் முகாம்களுக்கு திரும்ப வேண்டும். போராட்டக்காரர்களை கையாளும் விவகாரத்தை மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மக்களின் மன நிலையை அறிந்து நடவடிக்கை எடுப்பதில் திறமையானவர்கள். தீவிரவாதிகளை கையாளுவதில் சிஆர்பிஎப் படையினருக்கு மிகுந்த அனுபவம் உள்ளது. காஷ்மீர் மக்கள் முற்றிலுமாக இந்திய அரசு மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர் என்று கூறியிருந்தார்.