புதுவையிலுள்ள எழுத்தாளர் கி.ராஜநாராயனனை அவரது வீட்டில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார் கனிமொழி
கரிசல்காட்டு கதைச் சொல்லி என்று சக எழுத்தாளர்களால் கொண்டாடப்படுபவர் கி.ராஜநாராயணன். அவருக்கு கடந்த வாரம் 95 வது பிறந்தநாள் விழா புதுவையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்‘கரிசல் விருதுகள்’வழங்கப்பட்டன. அதிகம் படிக்காத கி.ரா. புதுவை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக அமர்த்தப்பட்டவர். கிராமத்து பழங் கதைகள், பழமொழிகள், நாட்டார் வழக்குச் சொல் அகராதி என பல தடங்களில் பயணித்தவர். அவரது 95வது பிறந்த நாளையொட்டி திமுகவை சார்ந்த கனிமொழி அவரது வீட்டில் சந்தித்து தன் வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். அப்பொழுது புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடனிருந்தார். இதற்கான புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.