டிரெண்டிங்

ஒரு போஸ்ட்டுக்கு ரூ.6 கோடி - டிக்டாக் பிரபலம் காட்டில் கொட்டும் பணமழை

JustinDurai

டிக்டாக்கில் ஒரு போஸ்ட் போடுவதற்கு 6 கோடி ரூபாய் வாங்குகிறார் கேபி லேம்.

சோஷியல் மீடியாவை பொறுத்தவரையில் பலருக்கு அது வெறும் பொழுதுபோக்கு தளம்; ஆனால் சிலருக்கு அது பணம் காய்க்கும் மரமாக இருக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் டிக்டாக் பிரபலமான கேபி லேம். டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் பல நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது.

இன்று டிக்டாக் தளத்தில் உலகளவில் அதிகப் ஃபாலோவர்களைக் கொண்டு உள்ளது கேபி லேம் தான். இவரது டிக்டாக் கணக்கை சுமார் 150 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். டிக் டாக் பிரபலம் ஆனதும் இவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று டிக்டாக், இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு போஸ்ட் போடுவதற்கு 7,50,000 டாலர் வாங்குகிறார். அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 6 கோடி ரூபாய். இதுமட்டும் அல்லாமல் இந்த வருட இறுதிக்குள் 10 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு அளவை எட்ட உள்ளார் கேபி லேம்.  22 வயதான கேபி லேம்க்கு சொந்த நாடு செனகல். ஆனால், சிறு வயதிலேயே இத்தாலிக்கு குடிபெயர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”கொஞ்சநேரம் அமருவதால் கெட்டா போய்விடும்?...” : பெண்களே இந்த பதிவு உங்களுக்குத்தான்!