நாட்டின் கல்வி முன்னேற்றத்திற்கும், மாணவர்களின் அறிவுத் திறமைகளை வளர்ப்பதிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுவதாக மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள அவர், ஆசிரியர்களின் உன்னதமான பணியானது, இன்றையை தலைமுறையை மட்டுமின்றி, புதிய தலைமுறைகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்களின் உரிமைகளுக்காக திமுக எப்போதும் குரல் கொடுத்து வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.