டிரெண்டிங்

கூடையில் சிக்கிய பெண்ணின் விரல்.. விரைந்த போலீஸ்: சூப்பர் மார்க்கெட்டில் நடந்த பரபரப்பு!

Janani Govindhan

சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க சென்ற பெண்ணின் விரல் கூடைக்குள் சிக்கியதால் அவசர போலீஸ் வரவழைக்கப்பட்டு பிறகு மீட்கப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வு அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்திருக்கிறது.

ஜான்சன் சிட்டியைச் சேர்ந்த 38 வயதான ஆஷ்லி நோலன் என்ற பெண் OCD (obsessive-compulsive disorder) , ADHD (attention-deficit hyperactivity disorder) மற்றும் படபடப்புக்கான ஆன்சைட்டி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்.

அருகே இருந்த சூப்பர் மார்கெட்டுக்கு ஷாப்பிங் வந்த போது கார்ட் கூடையின் இடுக்குகளில் ஆஷ்லியின் விரல் சிக்கியிருக்கிறது. அவருடன் வந்த தோழி ஒருவர் அதேக் கடையின் வேறு பகுதியில் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த போது அவரை அழைத்திருக்கிறார் நோலன்.

பின்னர் இருவரும் சேர்ந்து சூப்பர் மார்க்கெட்டின் ஹெல்ப் டெஸ்கில் இருப்பவரிடம் விவரத்தை சொல்ல அவர்கள் முதலில் பாக்கெட் கத்தியை வைத்து கூடையில் சிக்கிய விரலை வெளியே எடுத்த முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் பலன் கிட்டாததால் அந்த பாக்கெட் கத்தி கடை ஊழியர், ஆஷ்லி நோலன் ஆகிய இருவரின் கையிலேயே குத்தியிருக்கிறது.

இதனால் வேறு வழியின்று அவசர அழைப்பான 911-க்கு தொடர்பு கொண்டிருக்கிறார். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் ஆஷ்லி நோலனின் கையை அந்த கூடையில் இருந்து வெளியே எடுக்க அரைமணி நேரமாக போராடியிருக்கிறார்கள். இப்படியான போராட்டத்துக்கு பிறகே கூடையில் சிக்கிய பெண்ணின் கை விரலை வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேசியிருக்கும் ஆஷ்லி நோலன், “இப்படி கூடை போன்றவற்றில் கைகள், விரல்கள் சிக்குவது இது முறையாக இருக்காவிட்டாலும், போலீஸ் வந்து மீட்டது இதுதான் முறை.” என்றிருக்கிறார்.